பத்திரப்பதிவுத் துறை வன்பொருளில் திடீர் கோளாறு - சீரமைக்கும் பணி தீவிரம்
தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய இரு நாட்களாக அனைத்து முயற்சிகளும் துரிதமாக எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
பத்திரப்பதிவுத் துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பத்திரப்பதிவுத் துறை தகவல்களை சேமிக்கும் வன்பொருளில் (Hardware) சனிக்கிழமை ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய இரு நாட்களாக அனைத்து முயற்சிகளும் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே இதை கருத்தில் கொண்டு பத்திரப் பதிவு தொடர்பான நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.