குழித்துறையில் பிரம்மாண்ட ஓணம் பண்டிகை துவங்கியது- ஓண ஊஞ்சல் ஆடிய எம்.எல்.ஏ.
ஓணம் பண்டிகையின் ஒரு பகுதியாக 5-ம் தேதி காலை குழித்துறை தபால் சந்திப்பில் அத்தப்பூ கோலம் போடப்படுகிறது.;
குழித்துறை பிரதேஸ் கிளப் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை மிஞ்சும் வகையில் பிரம்மாண்டமாக ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். குமரி மற்றும் கேரளாவில் இருந்து இந்த ஓணம் சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். அவ்வகையில் 40-வது ஆண்டு ஓணம் விழாவை முன்னிட்டு குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் ஓண ஊஞ்சலை தாரகை கத்பட் எம்எல்ஏ துவக்கி வைத்து ஊஞ்சலில் ஆடினார். தொடர்ந்து சிறுவர்கள், பெண்கள், வயோதிகர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
4 -ம் தேதி தேதி குழித்துறை விஎல்சி மைதானத்தில் வித்தியாசமான வடிவத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட மேடையில் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவோண திருநாளான 5ம் தேதி காலை குழித்துறை தபால் சந்திப்பில் அத்தப்பூ கோலம் போடப்படுகிறது. தொடர்ந்து மேளதாளத்துடன் சீருடை அணிந்த இளைஞர்கள், கேரள மாநிலத்தின் கலாச்சாரமான நேரில் அணிந்து பெண்கள் முன் செல்ல மாவேலி ஊர்வலம் நடக்கிறது. மாலையில் பல்வேறு துறைகளின் பிரபலங்கள் பங்கேற்கும் ஸ்டார் மெகாஷோ உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன.