சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை பிடித்து சரமாரியாக தாக்கிய பெற்றோர்
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கரூர்,
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைப்புதூர் கிராமத்தில் வீட்டின் அருகே தோழிகளோடு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை கார் டிரைவர் மாரியப்பன் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுபற்றி தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாரியப்பனை பிடித்து சரமாரியாக தாக்கிய பெற்றோர், அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாரியப்பனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.