நாடாளுமன்றம் ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை; அப்பாவு

துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன ரெட்டி மிகச்சிறந்த நீதிபதி என அப்பாவு தெரிவித்தார்;

Update:2025-08-26 16:42 IST

நெல்லை,

நெல்லையில் செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது,

சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டத்திற்காக தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2000 கோடி நிதியை தர மத்திய அரசு மறுத்துவிட்டது. இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன ரெட்டி மிகச் சிறந்த நீதிபதி.வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்புகளை வழங்கியவர்.

நாடாளுமன்றம் ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை. சுதர்சன ரெட்டி வெற்றி பெற்றால் மட்டுமே நாடாளுமன்றம் ஜனநாயக முறைப்படி செயல்படும். பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒரு ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்டவர் என்பதால், அவரைத் தாங்கள் ஆதரிக்க முடியாது.

அமெரிக்க வரி விதிப்பால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய பா.ஜ.க. அரசின் வெளியுறவுக் கொள்கைகள் படுதோல்வி அடைந்ததுதான் காரணம். என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்