உணர்வுகளைத் தட்டி உழுப்பி உரிமைக்காக போராடினார் பெரியார் - எடப்பாடி பழனிசாமி புகழாரம்
உண்மையான சமத்துவ ஆட்சியை அதிமுக தலைமையில் 2026-ல் அமைத்திட உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.;
சென்னை.
தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தந்தை பெரியாரின் பிறந்தநாள் தினத்தை 'சமூக நீதி நாள்’ ஆக தமிழ்நாடு அரசு 2021-ல் அறிவித்திருந்தது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
கேள்விகள் கேட்டு பகுத்தறிவை விதைத்தார்!
உணர்வுகளைத் தட்டி உழுப்பி உரிமைக்காக போராடினார்!
சமத்துவ சமுதாயம் காண வயது கூடினும் தளராமல் உழைத்தார்!
யாருக்கும் யாரும் சிறியார் அல்ல என்றார்!
அதனாலே அவர் நம் பெரியார் என்றானார்!
பகுத்தறிவுப் பகலவனின் பிறந்தநாளில், அவர் வகுத்த சமூகநீதிப் பாதையில் என்றும் பயணித்து, உண்மையான சமத்துவ ஆட்சியை அதிமுக தலைமையில் 2026-ல் அமைத்திட உறுதியேற்போம்!
வாழ்க பெரியாரின் புகழ்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.