சென்னையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டிக் கொலை - மர்ம நபர்கள் வெறிச்செயல்

மோகன்ராஜை வெட்டிக் கொன்ற நபர்களை பிடிக்க போலீசார் 2 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.;

Update:2025-06-30 13:32 IST

சென்னை,

சென்னை கல்பாக்கம் அருகே ஈ.சி.ஆர். சாலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் மோகன்ராஜ் (50) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பேட்டையில் உள்ள வீட்டுக்கு பைக்கில் சென்றபோது காரில் பின்தொடர்ந்த மர்ம நபர்கள் வெறிச்செயலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகன்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மோகன்ராஜை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை பிடிக்க போலீசார் 2 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்