தூத்துக்குடியில் புகைப்படக் கண்காட்சி: கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்

தூத்துக்குடியில் புத்தக திருவிழாவை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சி போட்டி நடத்தப்பட்டது.;

Update:2025-08-23 18:01 IST

தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் 6-வது தூத்துக்குடி புத்தகத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புத்தக திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தின் செழுமையை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படக் கண்காட்சி போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியின் சிறந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்கினை திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி இன்று திறந்து வைத்தார்.

பின்னர் புத்தக அரங்குகளை பார்வையிட்ட கனிமொழி எம்.பி., புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தார். மேலும், புத்தகத் திருவிழாவிற்கு வருகைதந்த பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். முன்னதாக, “தொடர்ந்து படி தூத்துக்குடி” என்ற 6-வது புத்தகத் திருவிழா தொடர்பான வாசகங்கள் அடங்கிய ராட்சச பலூன்களை கனிமொழி எம்.பி. பறக்க விட்டார்.

இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்