விழுப்புரத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
விக்கிரவாண்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட ரெட்டிக்குப்பம், ஆசூர் மின்னூட்டிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ரெட்டிக்குப்பம், பொம்பூர், மண்டபம், சிந்தாமணி, அய்யூர்அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், பொன்னங்குப்பம், கயத்தூர், வி.சாத்தனூர், ஆவுடையார்பட்டு, ஆசூர், மேலக்கொந்தை, சின்னதச்சூர், கொங்கராம்பூண்டி, கொட்டியாம்பூண்டி, வடகுச்சிப்பாளையம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.