13 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு போலீஸ் வலைவீச்சு

கடந்த சில நாட்களாக 13 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது.;

Update:2025-09-28 18:18 IST

மதுரை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள து.நல்லொச்சான்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 35). பால்பண்ணை வைத்துள்ளார். இவருடைய மகளும், 13 வயது சிறுமியும் ஒரே பள்ளியில் படித்து வந்துள்ளனர். தனது மகளை பள்ளிக்கு சென்று அழைத்து வரும்போது, அந்த 13 வயது சிறுமியையும் சதீஷ்குமார் மோட்டார்சைக்கிளில் அழைத்து வருவாராம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக 13 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரை பெற்றோர் உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அப்போது சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து விசாரித்தனர். அதில், சதீஷ்குமார் தன்னை கர்ப்பமாக்கிவிட்டு, யாரிடமும் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியதாக சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை தேடி வருகின்றனர். மேலும், உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்