போலீஸ் எஸ்.பி. திடீர் ராஜினாமா: தமிழக அரசு ஏற்பு

போலீஸ் எஸ்.பி. அருணின் ராஜினாமா கடிதத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.;

Update:2025-06-15 14:07 IST

ஆயுதப்படை பிரிவில் 12-வது பட்டாலியன் கமாண்டன்டாக இருப்பவர் அருண். இவர் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்து, ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி. ஜெயராமுக்கு கடிதம் எழுதினார். இந்தக் கடிதம், டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மூலம், உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ராஜினாமா கடிதத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து போலீஸ் துறையில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான கடிதம் அவரிடம் வழங்கப்பட்டது.

அருண் மதுராந்தகத்தைச் சேர்ந்தவர். கடந்த 2013-ம் ஆண்டு குரூப் 1 தேர்வு மூலம் டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்தார். 2024-ல் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்