திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் போர்ச்சுக்கல் நாட்டினர் கூட்டுப் பிரார்த்தனை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது.;

Update:2025-11-27 13:42 IST

திருவண்ணாமலை,,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதுமட்டுமின்றி அவ்வப்போது வெளிநாட்டை சேர்ந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில், போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட சிவ பக்தர்கள் ஒன்றிணைந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். முதலில் சம்பந்த விநாயகரை தரிசனம் செய்து பின்னர் அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மன் சன்னதியில் வழிபாடு செய்தனர்.

அதனை தொடர்ந்து நவகோபுரங்களை தரிசனம் செய்து மகிழ மரம் அருகே போர்ச்சுக்கல் நாட்டு சிவபக்தர்கள் வட்ட வடிவில் அமர்ந்து கூட்டு பிரார்த்தனை செய்து சாமியை வழிபாடு செய்தனர். மேலும் அவர்கள் கல்தூண்களில் செதுக்கப்பட்டு இருந்த சிற்பங்களைக் கண்டு ஆச்சரியத்துடன் வியந்து பார்வையிட்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி மாடவீதிகளில் காலை மற்றும் இரவில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) 10-ம் நாள் விழாவன்று காலையில் பரணி தீபமும் மற்றும் சிகர நிகழ்ச்சியாக மாலையில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்