திருச்சியில் பல்வேறு இடங்களில் இன்று மின் தடை
பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது.;
திருச்சி,
துவரங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
துவரங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம், சடவேலம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைகோசிகுறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி, பிடாரப்பட்டி, வெங்கட்நாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூர், பில்லுபட்டி, கல்லுப்பட்டி, ஏ.பொருவாய், வேளக்குறிச்சி, மருங்காபுரி, காரைப் பட்டி, கரடிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கள்ளக்காம்பட்டி, சிங்கிலிப்பட்டி, எம்.இடையப்பட்டி, பழையபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று தமிழ்நாடு மின் வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதேபோல் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் உறையூர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதைெயாட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை கோணக்கரை, வாத்துக்காரத்தெரு, முதலியார்தெரு, வண்டிக்காரத்தெரு, விருப்பாச்சிபுரம், ஹவுசிங் யூனிட், சாலைரோடு, சுபானியாபுரம், நெசவாளர்காலனி, கீரைக்கொல்லைதெரு, பாளையம்பஜார், குறத்தெரு, செவந்திபிள்ளையார்கோவில்தெரு, வெள்ளாளத்தெரு ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.
லால்குடி, தொட்டியம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
லால்குடி பூவாளுர் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி லால்குடி நகர் பகுதியில் லால்குடி அரசு பொதுமருத்துவமனை, நாகம்மையார்தெரு, ராஜேஸ்வரிநகர், சாந்திநகர், பூவாளூர், பின்னவாசல், தென்கால், மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை, மேட்டாங்காடு, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில், கீழ்அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், அம்மன்நகர், காட்டூர், ராமநாதபுரம், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனூர், பெருவளநல்லூர், நஞ்சை, சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி மற்றும் இருதயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என லால்குடி இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் அன்புசெல்வம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இதேபோல், தொட்டியம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தொட்டியம், அரங்கூர், கமலாபுரம், பாலசமுத்திரம், தோளுர்பட்டி, எம்.புத்தூர், ஏலூர்பட்டி, எம்.களத்தூர், மேய்க்கல் நாயக்கன்பட்டி, தலமலைப்பட்டி, காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர், கொளக்குடி, அம்மன்குடி, பூலாஞ்சேரி, அப்பணநல்லூர், தும்பலம், நாடார்காலணி, சேருகுடி, சூரம்பட்டி, கேணிப்பள்ளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என முசிறி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.