அதிகாரப்பகிர்வு மக்களுக்கு நல்லதையே கொண்டு சேர்க்கும் - பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி ஆட்சி என்பதை வரவேற்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.;

Update:2025-06-29 15:08 IST

சென்னை,

கோவை விமான நிலையத்தில் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது;

"கோவையில் கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்வுக்கும், கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நாளை கிருஷ்ணகிரியில் மா வியாபாரிகளுக்கான ஆர்பாட்டம் நடத்தப்பட உள்ளது. சுதீஷ் பங்கேற்ற நிகழ்வுக்கும் கட்சிக்கு தொடர்பு இல்லை. நண்பர் என்ற முறையில் பங்கேற்றுள்ளார். தமிழகம் முழுவம் 8 மண்டலங்களாக பிரித்து தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.

"தேமுதிக கூட்டணி நிலைப்பாடு குறித்து 2026 ஜனவரி 9ம் தேதி கடலூர் மாநாட்டில் தெரிவிக்கப்படும். சட்டமன்றத் தேர்தலில் தமிழக கட்சிகள் கூட்டணியில் தலைமை வகிப்பதே சிறந்தது. கூட்டணி ஆட்சி என்பதை வரவேற்கிறோம். அதிகாரப்பகிர்வு மக்களுக்கு நல்லதையே கொண்டு சேர்க்கும்."

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்