தமிழகத்தில் 48 சிறந்த காவல் நிலையங்களுக்கு பரிசு அறிவிப்பு
சிவகங்கை டவுன், தென்காசியின் பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளின் காவல் நிலையங்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.;
சென்னை,
தமிழகத்தில் 48 காவல்நிலையங்கள் சிறந்த காவல்நிலையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கான பரிசுகள் செப்டம்பர் 6-ந்தேதி(நாளை) வழங்கப்படும் என டி.ஜி.பி. அலுவலகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. முன்பே முதல் 3 இடங்களுக்கு பரிசுகளை முதல்-அமைச்சர் வழங்கியிருந்த நிலையில், தற்போது மீதமுள்ள காவல் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
தென்மண்டலத்தில் இருந்து மதுரை உசிலம்பட்டி டவுன், விருதுநகரின் மல்லாங்கிணறு, சிவகங்கை டவுன், தென்காசியின் பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளின் காவல் நிலையங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின், நிலைய பொறுப்பாளர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை பெற்று செல்லுமாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.