டெல்லி இனிப்பு கடையில் ‘ஜிலேபி’ செய்த ராகுல்காந்தி

ராகுல் காந்தி ’ஜிலேபி’ செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.;

Update:2025-10-21 08:14 IST

புதுடெல்லி,

மக்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல்காந்தி பழைய டெல்லியில் உள்ள புகழ்பெற்ற இனிப்பு கடை ஒன்றுக்கு சென்றார். அங்கு அவர் ஜிலேபி மற்றும் லட்டு போன்ற இனிப்புகளை தனது கையால் செய்தார். இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த ராகுல்காந்தி, மக்கள் தங்கள் வீடுகளில் கொண்டாடிய தீபாவளி பண்டிகையின் சிறப்பம்சங்களை வெளியிடுமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.மேலும் அவர், ‘தீபாவளியின் உண்மையான இனிப்பு என்பது வெறும் சாப்பாட்டில் மட்டுமல்ல, உறவுகள் மற்றும் இணக்கத்தில்தான் உள்ளது’ எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

மற்றொரு பதிவில் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்தையும் அவர் பகிர்ந்திருந்தார். அதன்படி, ‘இந்தியா, மகிழ்ச்சியின் தீபங்களால் ஒளிரட்டும், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அன்பின் ஒளி ஒவ்வொரு வீட்டிலும் பரவட்டும்’ என கூறியிருந்தார்.ராகுல்காந்தி பகிர்ந்திருந்த வீடியோவில், அந்த இனிப்பு கடை உரிமையாளர், ‘உங்கள் பாட்டி, தந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் கடையில் இருந்து இனிப்புகள் வழங்கி இருக்கிறோம். இனி உங்கள்(ராகுல்காந்தி) திருமணத்துக்கு வழங்குவதற்காக காத்திருக்கிறோம்’ என்று கூறுகிறார். இதைக்கேட்டு ராகுல்காந்தி புன்னகைப்பதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்