ரமலான் நோன்பு நாளை தொடக்கம் - தலைமை காஜி அறிவிப்பு

ரமலான் நோன்பு நாளை தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் அய்யூப் அறிவித்துள்ளார்.;

Update:2025-03-01 05:15 IST

சென்னை,

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று நோன்பு. இஸ்லாமிய மாதமான ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு இருப்பது வழக்கம்.

ரமலான் நோன்பு மற்றும் ரமலான் பண்டிகை என்பது பிறையின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. இதனால் ரமலான் பண்டிகை உலகின் ஒவ்வொரு இடங்களிலும் ஒருநாள் வரை மாறுபடுகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ரமலான் பிறை நேற்று தென்படாததால் ரமலான் நோன்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் அய்யூப் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்