ராமநாதபுரம்: ஸ்பீக்கர் விழுந்ததில் 6 வயது சிறுமி பலி
கோவில் திருவிழாவுக்கு பயன்படுத்திய ஸ்பீக்கர் விழுந்ததில் 6 வயது சிறுமி உயிரிழந்தார்.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கோரைக்குளத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு பைக் செட்கள் ஆங்காங்கே கட்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மைக் செட் உரிமையாளர் வீரகுமார் என்பவர் வீட்டின் வெளியே பெரிய அளவிலான ஸ்பீக்கர்களை அடுக்கி வைத்துள்ளார். அதன் கயிற்றை சுகவதி என்ற சிறுமி அவிழ்த்ததால், குழந்தையின் மீதே ஸ்பீக்கர் விழுந்துள்ளது.
இதில் சிறுமி உடல் நசுங்கி பரிதாப உயிரிழந்துள்ளார். ஸ்பீக்கர் விழுந்ததில் 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.