திருத்துறைப்பூண்டி அருகே சாலை விபத்து : 4 பேர் பரிதாப பலி
திருத்துறைப்பூண்டி அருகே ஆம்னி வேனும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.;
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாண்டி என்ற பகுதியில் ஆம்னி வேனும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்து சம்பவத்தில் சிக்கி, கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆம்னி வேனில் பயணித்த 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.