சிதம்பரம்: ஆலோடி சாப் தர்காவில் சந்தனக்கூடு விழா; சாமி வந்து ஆடிய பெண்கள்

விழாவில் பெண்கள் சாமி வந்து ஆடிய காட்சி பக்திபரவசத்தை ஏற்படுத்தியது.;

Update:2025-11-28 16:51 IST

கடலூர்,

சிதம்பரம் அருகே பெரியப்பட்டு அருகே கிராமத்தில் உள்ள ஆலோடி சாப் தர்காவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் சந்தனக்கூடு விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு சந்தனக்கூடு விழாவிற்கான கொடியேற்று விழா கடந்த நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கியது. நேற்று இரவு உலக நன்மை வேண்டி சிறப்பு தொழுகையும், அதிகாலை உரூஸ் எனும் சந்தனம் பூசும் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. பெரியப்பட்டு ஆலோடி சபா தர்கா நிர்வாகி அஸ்லாம் ரவூஃபீ, உமர்கான்,காசிம்கான் அப்துல்கனி, முகமது ரபி மற்றும் ஜமாத்தார்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்த நிலையில், பெரியப்பட்டு கிராமத்தைச் சார்ந்த இந்து- முஸ்லிம் இரு மதத்தினரும் ஒருங்கிணைந்து இந்த சந்தனக்கூடு விழாவை நடத்தினர். விழாவில் பெண்கள் சாமி வந்து ஆடிய காட்சி பக்திபரவசத்தை ஏற்படுத்தியது. மன அமைதி தரக்கூடிய இந்த தர்கா விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்