மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி பிறந்தநாள் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
சென்னை,
மேற்கு வங்க மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
மேற்கு வங்க மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
முதல்- மந்திரியாக, தங்களது அரசாங்கம் மதச்சார்பின்மையை ஆட்சி நிர்வாகத்தை வழிநடத்தும் கொள்கையாக நிலைநிறுத்தி, மாநிலமானது அனைவருக்கும் சமமான உரிமை கொண்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய இந்த ஆட்சி அணுகுமுறை தொடர்ந்து அரசியலமைப்பு விழுமியங்களையும் சமூக நல்லிணக்கத்தையும் வலிமைப்படுத்தட்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.