திருச்சியில் நடைபெறும் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா; அமித்ஷா பங்கேற்பு

விழாவுக்கு பின்னர் அமித்ஷா டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.;

Update:2026-01-05 13:11 IST

சென்னை,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருச்சி வந்துள்ளார். நேற்று, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசாரப் பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றினார்.

இன்று காலை ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து, தற்போது மன்னார்புரத்தில் நடைபெறும் ‘மோடி பொங்கல் விழா’ நிகழ்வில் பங்கேற்று வருகிறார். 'நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’ என்ற வாசகத்துடன் 1,008 பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் மேடையில் அமித்ஷாவும், மேடைக்கு கீழே ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களும் பொங்கலிட்டு வருகின்றனர்.

இந்த விழாவுக்கு பின்னர் கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து அமித்ஷா புதுடெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்