கவனத்துடன் பேச வேண்டும்...விஜய்க்கு சரத்குமார் அறிவுரை
விஜய், பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.;
சென்னை ,
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், பாஜக குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக நெல்லையில் நடைபெற உள்ள பா.ஜ.க. பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த சரத்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,
மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நடிகர் விஜய் அரசியலில் வளரவில்லை. எதை பேசுகிறோம், யாரைப்பற்றி பேசுகிறோம் . எதற்காக பேசுகிறோம் என்று கவனத்துடன் பேச வேண்டும் என்று கூறினார்.