பிளஸ்-1 மாணவியிடம் சில்மிஷம்; பள்ளி ஆசிரியர் கைது

போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.;

Update:2025-06-08 09:03 IST

சேலம்,

சேலம் மாவட்டம் காகாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 56). இவர், சிவதாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் நேற்று சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆசிரியர் ஜெகதீசன், சம்பந்தப்பட்ட மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்