திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சுமார் 60 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது.;

Update:2025-04-11 23:40 IST

திருச்செந்தூர்,

பவுர்ணமி, அமாவாசை நாட்களில் திருச்செந்தூரில் கடல் உள்வாங்குவது வாடிக்கையாக நிகழ்கிறது. நாளை (சனிக்கிழமை) பவுர்ணமி தினமாகும். இந்த நிலையில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சுமார் 60 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது.

இதனால் பாசிபடர்ந்த பாறைகள் வெளியே தெரிந்ததையும், எனினும் பக்தர்கள் அச்சமின்றி வழக்கம்போல் புனித நீராடியதையும் படத்தில் காணலாம். அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவது வழக்கம்தான் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்