பாம்பனில் திடீரென உள்வாங்கிய கடல்

மதியத்துக்கு பின்னர் கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.;

Update:2025-08-26 00:21 IST

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கடலானது நேற்று வழக்கத்துக்கு மாறாக பல அடி தூரத்துக்கு உள்வாங்கியது. மேலும், தோப்புக்காடு, சின்னப்பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதனால் அந்த இடம் சகதிக்காடாக காட்சி அளித்தது.

கடல் உள்வாங்கியதால், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகள் தரை தட்டி நின்றன. இதனால் அப்பகுதியினர் அச்சமடைந்தனர். நீராட்டம் காரணமாக கடல் உள்வாங்கியதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மதியத்துக்கு பின்னர் கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. 

Tags:    

மேலும் செய்திகள்