காங்கிரஸ் குறித்த ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

அரசியல் நாகரீகம் தெரியாமல் ராஜேந்திர பாலாஜி பேசுவதாக செல்வப்பெருந்தகை கூறினார்.;

Update:2025-11-15 17:32 IST

சென்னை,

பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை சுட்டிக்காட்டி, “ காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள். காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை, ஊருக்கும் தேவையில்லை.” என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி இருந்தார். இதற்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக பேசியதாவது;

”ராஜேந்திர பாலாஜி குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாமல் அரசியல் நாகரீகம் தெரியாமல் பேசுகிறார், இபிஎஸ் என்ன செய்கிறார்?, மறுப்பு சொல்லி இருக்க வேண்டாமா? கண்டிக்க வேண்டாமா?, அதிமுகவிற்கு என்ன வரலாறு இருக்கிறது?, அதிமுக ஆரம்பித்து 53 வருடங்களே ஆகிறது, இந்த 53 ஆண்டுகளில் எத்தனை தோல்விகளை, தொடர் தோல்விகள் இருந்திருக்கிறது. காங்கிரஸ் ஆரம்பித்து 140 வருடம் ஆகிறது. இன்றைக்கு இந்தியாவில் எந்தவித பதவிகளுக்காகவும் பவுஸ்களுக்காகவும் இல்லாத ஒரே இயக்கம் காங்கிரஸ் மக்களுக்கான இயக்கம்.

Advertising
Advertising

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை எல்லா கிராமங்களிலும் கொடி பறக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சி கொடிதான். அதிமுகவில் எத்தனை கிராமத்தில், விருதுநகரில் கொடி பறக்கிறது என்று சொல்ல சொல்லுங்கள். இப்படி நாகரிகமற்ற முறையில் பேசக்கூடாது. எங்களாலும் நிறைய பேச முடியும். எங்களிடம் இருக்கிறது. பாஜக தலைவர்கள் எல்லாம் நாகரீகம் மற்றும் முறையில் உங்களை என்னென்ன பேசியிருக்கிறார்கள். சிறைக்கு சென்றவர், தண்டனை அனுபவித்தவர், அபராதம் கட்டியவர், இப்படி எல்லாம் பேசினார்கள். நாங்கள் காங்கிரஸ், அப்படி பேசினோமா?.

ராஜேந்திர பாலாஜி பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம். , ராஜேந்திர பாலாஜி வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம்.”

இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்