தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் ஆலோசனை

என்.டி.ஏ. கூட்டணியில் அன்புமணி இணைந்துள்ளார்.;

Update:2026-01-21 14:53 IST

சென்னை,

சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. அந்தவகையில், அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் 23-ந்தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச இருக்கிறார்கள். எனவே கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

தற்போது வரை அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. (அன்புமணி), த.மா.கா., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. அதேபோல் கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து தனது கட்சி நிர்வாகிகளுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இதற்காக விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று மாலை நிர்வாக குழு கூட்டத்தை ராமதாஸ் கூட்டுகிறார். என்.டி.ஏ. கூட்டணியில் அன்புமணி இணைந்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இதில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்