சென்னை-நெல்லை இடையே 21-ம் தேதி சிறப்பு ரெயில்

வார இறுதி நாட்களில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-06-17 15:51 IST

சென்னை,

சென்னையில் இருந்து நெல்லைக்கு வரும் 21 ஆம் தேதி ( சனிக்கிழமை) சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை எழும்பூரில் இரவு 9.55 மணிக்கு புறப்படுட்டு மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை)  காலை நெல்லைக்கு   8.45 மணிக்கு இந்த ரெயில் சென்றடையும்.

 தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி மதுரை , கோவில்பட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாக நெல்லைக்கு இந்த ரெயில் சென்றடையும். மறுமார்க்கத்தில் 22 ஆம் தேதி நெல்லையில் இரவு 9.40 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் சென்னை எழும்பூருக்கு  காலை 8.15 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை (18.06.2025) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்