தசரா திருவிழாவை முன்னிட்டு யஸ்வந்த்பூர்-மங்களூரு இடையே சிறப்பு ரெயில்
தசரா திருவிழாவையொட்டி, பயணிகளின் வசதிக்காக கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்பூரில் இருந்து மங்களூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.;
கோப்புப்படம்
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தசரா திருவிழாவையொட்டி, பயணிகளின் வசதிக்காக கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்பூரில் இருந்து மங்களூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, யஸ்வந்த்பூரில் இருந்து வருகிற 30-ந் தேதி இரவு 11.55 மணிக்கு மங்களூருவிற்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06257) இயக்கப்படுகிறது. அதே போல, மங்களூருவில் இருந்து அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி மதியம் 2.35 மணிக்கு யஸ்வந்த்பூருக்கு சிறப்பு ரெயில் (06258) இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.