'உங்களுடன் ஸ்டாலின் திட்டம்': முதல் நாளே மக்கள் பாராட்டு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
'உங்களுடன் ஸ்டாலின் ' திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.;
சென்னை,
சென்னை சைதாப்பேட்டையில் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,
வீடு தேடி சேவைகளை தரும் திராவிட மாடல் அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் இன்று மட்டும் 109 முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் நாளே மக்கள் இதனை வரவேற்று பாராட்டுகின்றனர்.தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளை சார்ந்த 45 சேவைகளும் நகர்புறங்களில் 13 துறைகளை சேர்ந்த 43 சேவைகளும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நடத்தப்பட்டு வருகின்றன.சென்னை முழுவதும் 400 முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு எளிதாக சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.