சென்னையில் நாளை 12 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.;

Update:2025-09-24 17:37 IST

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (25.09.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-10ல் பூந்தோட்ட தெருவில் உள்ள பூந்தோட்ட விளையாட்டுத் திடல், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-44ல் பெரம்பூர், துளசிங்கம் தெருவில் உள்ள எஸ்.கே.என்.எஸ்.பி.எம்.சி. விவேகானந்தா வித்யாலயா இளநிலை கல்லூரி, இராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-58ல் பெரியமேடு, நேவல் மருத்துவமனை சாலையில் உள்ள பழைய சமுதாயக் கூடம், திரு.வி.க. நகர் மண்டலம் (மண்டலம்-6),

வார்டு-70ல் பெரம்பூர், ராஜா தெருவில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடம், அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-83ல் கொரட்டூர், அக்ரஹாரம், அன்னை நகர் சாலையில் உள்ள மோகன் கார்டன், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-108ல் சேத்துபட்டு, டாக்டர் குருசாமி சாலையில் உள்ள அண்ணா அரங்கம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-118ல் அண்ணா சாலையில் உள்ள டி.யூ.சி.எஸ். காமதேனு திருமண மண்டபம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்–10) வார்டு-140ல் மேற்கு மாம்பலம், மேட்டுப்பாளையம் எத்திராஜ் நகர், கோடம்பாக்கம் சாலையில் உள்ள வி.கே.எம். மஹால், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11),

வார்டு-148ல் நெற்குன்றம், என்.டி. பட்டேல் சாலையில் உள்ள ஜி.எம். மஹால், ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12), வார்டு-162ல் தில்லைகங்கா நகர், 45வது தெரு, உள்வட்ட சாலையில் உள்ள ஆனந்தா திருமண மண்டபம், அடையாறு மண்டலம் (மண்டலம்-13), வார்டு-175ல் ஆதம்பாக்கம், லட்சுமி ஹயக்ரீவர் நகர், 3வது குறுக்கு தெருவில் உள்ள விளையாட்டுத்திடல், பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-187ல் மடிப்பாக்கம், பாலையா கார்டன், பஜனை கோயில் தெருவில் உள்ள ருக்மணி மஹால் ஆகிய 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்