தெருநாய் விவகாரம்; புளூ கிராஸ் அமைப்பின் கடிதத்திற்கு தமிழக டி.ஜி.பி. பதில்
புகார்களுக்கு முகாந்திரம் இருந்தால் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழ்நாட்டில் பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிப்போர் மீதான தாக்குதல் மற்றும் தொந்தரவுகளைத் தடுக்கக் கோரி 'புளூ கிராஸ்' அமைப்பு சார்பில் தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. தெரு நாய்களுக்கு உணவளிப்பவர்கள் மீதான தாக்குதலை தடுக்க காவல் நிலையங்களுக்கு டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என புளூ கிராம் அமைப்பு வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில், புளூ கிராஸ் அமைப்பின் கடிதத்திற்கு தமிழக டி.ஜி.பி. வெங்கட்ராமன் பதிலளித்துள்ளார். இந்த விவகாரத்தில் புளூ கிராஸ் அமைப்பினரின் புகார்களுக்கு முகாந்திரம் இருந்தால், அது தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் எனவும், இது தொடர்பாக காவல் நிலையங்களுக்கு தனியாக சுற்றறிக்கை அனுப்ப தேவையில்லை எனவும் டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.