காதலிக்க மறுத்த சிறுமியை அடித்து உதைத்த மாணவர்

சிறுமியை வழிமறித்து "நீ என்னை காதலிக்க வேண்டும்" என்று மாணவர் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.;

Update:2025-11-29 17:36 IST

கோப்புப்படம்

சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர் நகர், அடுத்த ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கே.கே நகரில் உள்ள காபி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டின் அருகே வசித்து வரும் கல்லூரி மாணவர் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் காதலர்கள் இருவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர்.

ஆனால் தனது காதலியை மறக்க முடியாமல் தவித்து வந்த கல்லூரி மாணவர் கடந்த சில நாட்களாகவே வேலைக்கு செல்லும் வழியில் சிறுமியை வழிமறித்து "நீ என்னை காதலிக்க வேண்டும்" என்று கூறி தொடர்ந்து தொல்லை கொடுத்தார்.

ஆனால் அவருடன் பேச மறுத்து சிறுமி விலகி சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர் சிறுமி வேலை பார்த்து வரும் காபி கடைக்கு சென்று ரகளையில் ஈடுபட்டார். இதை கண்டித்த சிறுமியை அவர் சரமாரியாக அடித்து உதைத்தார்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையறிந்த சிறுமியின் தாய் தனது மகளை தாக்கிய கல்லூரி மாணவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடபழனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்