நெல்லையில் தொடர் மழை: உளுந்து பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் வேதனை

இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் டிட்வா புயல் நிலைகொண்டுள்ளது.;

Update:2025-11-29 15:43 IST

இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் டிட்வா புயல் நிலைகொண்டுள்ளது. இந்த புயல் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதனிடையே, நெல்லை மாவட்டத்தில் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் 150 ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் உளுந்து பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து பயிர் தண்ணீரில் மூழ்கியது. இதனால், லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும், கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்