சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலித்த சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலித்த சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-06-29 22:55 IST

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சாலை செல்கிறது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் மற்றும் சரக்கு லாரிகள் கூடலூர் வழியாக இயக்கப்படுகிறது. அங்கு கூடலூர் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வாகனத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல இடங்களில் வாகன சோதனை செய்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கூடலூரில் இருந்து கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மார்த்தோமா நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சுற்றுலா பயணிகளிடம் கூடலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுலைமான் பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. மேலும் வீடியோ காட்சியும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா விசாரணை நடத்தினார். பின்னர் கூடலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுலைமானை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்