ஜனாதிபதி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகள் எங்களுக்கே சாதகம்: திமுக வழக்கறிஞர் வில்சன்

கவர்னர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கெனவே அளித்த தீர்ப்பை தற்போதைய கருத்து பாதிக்காது என வில்சன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-20 17:54 IST

சென்னை,

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த விவகாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 விளக்க கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொட்பாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில், திமுக வழக்கறிஞர் வில்சன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜனாதிபதி வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து அவர் பேசியதாவது;

Advertising
Advertising

"ஜனாதிபதி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்தது தீர்ப்போ, உத்தரவோ அல்ல. வழக்கில் தனது கருத்தைத்தான் கூறியுள்ளது. ஜனாதிபதிக்கு ஆலோசனைகளையே சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது. கவர்னர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கெனவே அளித்த தீர்ப்பை தற்போதைய கருத்து பாதிக்காது. தமிழக அரசு பெற்ற தீர்ப்பை இது கட்டுப்படுத்தாது. சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகள் எங்களுக்கே சாதகமாக உள்ளது. கவர்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும் என கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. மசோதாக்களை கவர்னர் காலதாமதம் செய்தால் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டு செல்வோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்