தாம்பரம்- போத்தனூர் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில் சேவைகளை நீட்டித்துள்ளது.;

Update:2025-04-26 17:38 IST

கோப்புப்படம்

தாம்பரம் - போத்தனூர் செல்லும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06185) வருகிற மே மாதம் 9, 16, 23, 30 மற்றும் ஜூன் 6, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து (வெள்ளிக்கிழமை) மாலை 5.05 மணியில் புறப்படும்.

மறுமார்க்கத்தில் போத்தனூர் - தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06186) வருகிற மே மாதத்தில் 11, 18, 25 மற்றும் ஜூன் 8, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் போத்தனூரில் (ஞாயிற்றுக்கிழமை) இருந்து 11.55 மணியளவில் புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

ரெயில் பெட்டி அமைப்பு: 1- ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, 3- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 12-ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 2- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2- இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்