தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரெயில் பகுதியளவு ரத்து

ஒலக்கூர் - திண்டிவனம் இடையே பராமரிப்பு பணி நடப்பதால் ரெயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-06-08 08:06 IST

கோப்புப்படம்

தாம்பரம்,

தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரெயில் இன்று மேல்மருவத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலக்கூர் - திண்டிவனம் இடையே பராமரிப்பு பணி நடப்பதால் தாம்பரத்தில் இருந்து விழுப்புரத்திற்கு 9.45 மணிக்கு புறப்படும் ரெயில் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மறுமார்க்கத்தில் விழுப்புரத்துக்கு பதில் மேல்மருவத்தூரில் இருந்து இன்று பிற்பகல் 1.40 மணிக்கு இந்த ரெயில் சென்னை புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்