சென்னை, தமிழக சட்டசபையில் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டது. பேரவை விதிகளின்படி, ஒரு கூட்டம் முடிந்தால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்த வேண்டும். அந்த வகையில், இம்மாத இறுதிக்குள் சட்டசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடும் என்று பேரவை தலைவர் அப்பாவு கடந்த நவம்பர் 25-ம் தேதி அறிவித்திருந்தார். கடந்த 2-ம் தேதி நடந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில், சட்டசபை கூட்டத்தை டிசம்பர் 9, 10-ம் தேதிகள் (இன்றும், நாளையும்) என 2 நாட்கள் நடத்துவது என முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.