கவர்னர் வெளிநடப்பால் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனைகளை மறைத்து விட முடியாது - மு.க. ஸ்டாலின்
எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, 'ஆளுநர் உரை தேவையில்லை' என அரசியலமைப்பு திருத்தம் கோருவோம் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.;
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, 'ஆளுநர் உரை தேவையில்லை' என அரசியலமைப்பு திருத்தம் கோருவோம்!
அரசு தயாரித்தளித்த அறிக்கையை ஆளுநர் படிக்காமல் வெளியேறுவதால், திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகளை பயன்பெறும் மக்களிடம் மறைத்துவிட முடியாது.
அரசியலமைப்புக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சட்டப்பேரவைக்கும் மதிப்பளிக்காமல் மக்கள் நல நடவடிக்கைகளை முடக்கி வைத்து முரண்டு பிடிக்கும் தமிழ்நாடு ஆளுநரை 'Recalcitrant Governor' என “The Hindu” தலையங்கத்தில் நேற்று குறிப்பிட்டிருந்தார்கள். அவரது இன்றைய செயல்பாடும் அதனை மெய்ப்பித்துள்ளது.