பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்த தமிழக வெற்றிக் கழகம் முடிவு
தமிழ்நாடு முழுவதும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்த தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
தமிழ்நாடு முழுவதும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்த தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது. மகளிர் தினத்தை முன்னிட்டு வருகிற 8-ந்தேதி இந்த கருத்தரங்கை நடத்த தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வரும் நிலையில் மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த அக்கட்சி சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி சார்பில் மாணவிகள் மத்தியில் பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.