தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

தவெக தலைவர் விஜய் உடன் அரசியல் வியூக அமைப்பாளர் பிரஷாந்த் கிஷோர் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது.;

Update:2025-02-10 15:59 IST

கோப்புப்படம் 

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்தார். நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தல் வியூகம் குறித்து விஜய், பிரசாந்த் கிஷோருடன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பு சுமார் 2.25 மணி நேரம் நீடித்ததாகவும், த.வெ.க.வுக்காக பணியாற்ற பிரசாந்த் கிஷோருடன் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தேர்தலுக்கான பணியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் விஜய்-பிரசாந்த் கிஷோரின் சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ள பிரசாந்த் கிஷோர் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் வியூக அமைப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மார்ச் முதல் வாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பான தரவுகள் மற்றும் திட்டமிடல்களை ஆதவ் அர்ஜுனா மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்