டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்; கடை திறக்காததால் மதுபிரியர்கள் பரிதவிப்பு

திருவள்ளூர் அருகே காக்களூர் மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அனைத்து டாஸ்மாக் கூட்டுக் குழுவினர் திடீரென முற்றுகையிட்டனர்.;

Update:2025-09-01 13:42 IST

சென்னை,

டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப கொடுத்தால், 10 ரூபாய் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான பணியாளர்கள் கூட்டம் சமீபத்தில் நந்தது. இதில், பணியாளர்கள், டாஸ்மாக் கடைகள் அருகிலேயே காலி மதுபாட்டில்களை வாங்கி வைத்துக் கொள்ள, தனியாக இடம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான வாடகையை பணியாளர்களே செலுத்த வேண்டும் என, டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதற்கு பணியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தநிலையில், திருவள்ளூர் அருகே காக்களூர் மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அனைத்து டாஸ்மாக் கூட்டுக் குழுவினர் திடீரென முற்றுகையிட்டனர். அப்போது திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்திற்கு ஊழியர்களின் கோரிக்கைகளை எடுத்துரைக்க நீதிமன்ற உத்தரவின்படி குழு அமைத்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். அதுவரையில் மேற்கு மாவட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டமாட்டோம், காலி பாட்டில்களை வாங்க மாட்டோம் என்பதை வலியுறுத்தி டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் திருவள்ளூர் சுற்றுவாட்டாரத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளதால் மதுகிடைக்காத விரக்தியில் மதுபிரியர்கள் பரிதவிப்புடன் திரும்பி செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்