தூத்துக்குடியில் டீ வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி, மடத்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் சைக்கிள் மூலம் தெருத் தெருவாக டீ வியாபாரம் செய்து வந்தார்.;

Update:2025-07-24 22:17 IST

தூத்துக்குடி மடத்தூர், தேவர் தெருவைச் சேர்ந்த சங்கரன் மகன் முனியசாமி (வயது 58), சைக்கிள் மூலம் தெருத் தெருவாக டீ வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு விபத்தில் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவரால் நடக்க முடியாமல் போனது.

இதனால் வியாபாரத்திற்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் மன வேதனையில் இருந்த அவர் இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்