பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
போக்சோ சட்டத்தில் ஆசிரியரை போலீசார் கைதுசெய்தனர்.;
வேலூர்,
வேலூர் மாவட்டம் கொணவட்டம் மதினாநகரை சேர்ந்தவர் முகமது சானேகா (வயது 35). வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவர் 10-ம் வகுப்பு மாணவியிடம் செல்போனில் புகைப்படம் அனுப்பும்படியும், வீடியோ கால் செய்யும்படியும் கட்டாயப்படுத்தி, அவ்வாறு செய்யாவிட்டால் தேர்வில் சரியாக மதிப்பெண் வழங்க மாட்டேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். அதனால் பயந்துபோன மாணவி தனது புகைப்படங்களை அனுப்பி வைத்து, வீடியோ காலிலும் பேசி உள்ளார்.
இதனை சாதகமாக பயன்படுத்திய ஆசிரியர் பள்ளியில் வைத்து மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து முகமது சானேகாவை கைது செய்தார்.