தைப்பூச திருவிழா: மருதமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வாகனங்களில் செல்ல தடை
மருதமலை முருகன் கோவிலில் 4-ந் தேதி வசந்த உற்சவம் நடைபெறுகிறது.;
கோவை,
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 25-ந் தேதி மாலை 5 மணி அளவில் விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி நடைபெறுகிறது. 26-ந் தேதி காலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது.
அடுத்த மாதம்(பிப்ரவரி) 1-ந் தேதி திருக்கல்யாணம், மாலை 3 மணிக்கு திருத்தேர் வீதி உலா நிகழ்ச்சி, 2-ந் தேதி மாலை 4.30 மணி முதல் 7.30 மணிக்குள் தெப்பத்திருவிழா, 3-ந் தேதி மாலை 4.30 மணிக்கு கொடி இறக்குதல், 4-ந் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை வசந்த உற்சவம் நடைபெறுகிறது.
இதையொட்டி 30-ந் தேதி முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை மலைக்கோவிலுக்கு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மலைப்படிகள் அல்லது கோவிலின் பஸ் மற்றும் கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்படும் பஸ்களில் பக்தர்கள் பயணம் செய்து மலைக்கோவிலுக்கு செல்லலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.