தஞ்சாவூர்: கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதி பலி

பொள்ளாச்சியைச் சேர்ந்த தம்பதியினர் ஒரு காரில் தங்களுடைய 60-ம் திருமணத்திற்காக திருக்கடையூருக்கு சென்று கொண்டிருந்தனர்.;

Update:2025-10-17 10:54 IST

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 60) அவரது மனைவி கலாவதி(59) உள்ளிட்ட 5 பேர் இன்று அதிகாலை ஒரு காரில் தங்களுடைய 60-ம் திருமணத்திற்காக திருக்கடையூருக்கு சென்று கொண்டிருந்தனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை அருகே இவர்களுடைய கார் சென்றபோது எதிரே வந்த லாரியோடு நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் சுப்பிரமணியன், கலாவதி தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கார் டிரைவர் உள்பட 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.   

Tags:    

மேலும் செய்திகள்