கோர்ட்டுக்கு வருபவர்களின் உடமைகளை ஸ்கேனர் வைத்து பரிசோதிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

உடைமைகளை ஸ்கேனர் வைத்து பரிசோதிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2025-01-29 17:59 IST

சென்னை,

சென்னை ஐகோர்டிற்கு வருபவர்களின் உடைமைகளை ஸ்கேனர் வைத்து பரிசோதிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி ஐகோர்ட்டு கட்டிடத்திற்கு தரும் பாதுகாப்பை போலவே ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் அனைத்து நுழைவாயில்களிலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று வழக்கறிஞர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே பாதுகாப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்