விவசாயப் பெருமக்களை வலுக்கட்டாயமாக கைது செய்தது கண்டிக்கத்தக்கது - நயினார் நாகேந்திரன்

விவசாயிகள் கடந்த ஒன்றரை வருடமாக நீதி கேட்டு போராடி வருவது அனைவரும் அறிந்ததே என தெரிவித்துள்ளார்.;

Update:2025-06-16 20:53 IST

சென்னை,

தமிழக பா.ஜக. தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

தஞ்சாவூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே தங்களின் நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயப் பெருமக்களை வலுக்கட்டாயமாக கைது செய்த அரசின் அராஜகப் போக்கு கண்டிக்கத்தக்கது.

பாபநாசம் அருகே உள்ள திருமாண்டங்குடி கிராமத்தில் இயங்கிவந்த சர்க்கரை ஆலையானது தங்களுக்கு கோடிக்கணக்கானத் தொகையை நிலுவையில் வைத்திருப்பதாகவும், சட்டவிரோதமாக தங்களின் பெயரில் சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வங்கிகளில் கடன் பெற்றிருப்பதாகவும் குற்றம் சாட்டி வரும் அக்கிராமத்தின் கரும்பு விவசாயிகள், கடந்த ஒன்றரை வருடமாக நீதி கேட்டு போராடி வருவது அனைவரும் அறிந்ததே.

'நானும் டெல்டாக்காரர்' என வெற்றுப் பெருமை பேசும் தமிழக முதல்வர், பல மாதங்களாகப் போராடி வரும் தஞ்சாவூர் விவசாயப் பெருமக்களை அவர்கள் ஊருக்கே சென்று சந்திக்காவிடிலும், அவ்வழியே செல்லும் போதாவது அவர்களின் குறைகளைக் கேட்டறிந்திருக்கலாம். அதுதான் ஒரு நல்ல தலைமைப் பண்பின் இலக்கணம். அதை விட்டுவிட்டு அவர்களை சந்திக்க அனுமதி மறுத்ததோடு ஏவல்துறையை ஏவி அவர்களைக் குண்டுக்கட்டாகக் கைது செய்திருப்பது அடக்குமுறையின் உச்சம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்