2026-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் - ராமதாஸ்

கூட்டணி குறித்து நேரம் வரும் போது சொல்கிறேன் என ராமதாஸ் தெரிவித்தார்.;

Update:2025-06-09 14:52 IST

சென்னை,

தமிழகத்தில், 2026-ல் ஆட்சி மாற்றம் வரும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சென்னையில் 2 நாட்கள் தங்கிய ராமதாஸ், ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தினார். மீண்டும் தைலாபுரம் செல்வதற்கு முன்பாக கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், பேசியதாவது;

அன்புமணி உடனான பிரச்சினை சரி செய்யப்படும். சரி செய்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும். சென்னைக்கு வந்த 2 நாள் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என அமித்ஷா சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். எந்தக் கட்சி குறித்தும் குறை சொல்ல வேண்டிய நேரம் இது கிடையாது, கூட்டணி குறித்து நேரம் வரும் போது சொல்கிறேன்." என்றார்.

 

Tags:    

மேலும் செய்திகள்